சின்னத்தை தப்பாகச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்... உடனே கூச்சல் போட்டு திருத்திய கூட்டம்!

By SG Balan  |  First Published Apr 6, 2024, 7:37 PM IST

திருச்சியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், நிலையில் அந்தச் சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்காமல், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொதப்பலாகப் பேசினார்.


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பரப்புரைக்கு இன்னும் 2 வாரங்களுக்கும் குறைவாக நாள்களே உள்ளதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது இடங்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஒரு பெண் உதயநிதி ஸ்டாலினுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாகக் கூறினார்.

இளைஞரைக் கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்; உ.பி.யில் அட்டூழியம்!

உடனே உதயநிதி அந்தப் பெண்ணின் மொபைல் போனை வாங்கி மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். பிறகு தொடர்ந்து கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி, தனது ரசிகர்களுடன் போட்டு எடுத்து மகிழ்ந்த குஷியில் சின்னத்தையே தவறாகக் உளறிவிட்டார்.

திருச்சியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், நிலையில் அந்தச் சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்காமல், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொதப்பலாகப் பேசினார். உதயநிதி தப்பாகச் சொன்னாலும் அலர்ட்டாக இருந்த மக்கள் உடனே தீப்பெட்டி சின்னம், தீப்பெட்டி சின்னம் என்று கோஷம் போட்டு உதயநிதிக்கு நினைவூட்டினர்.

கூட்டத்தின் கூச்சலைக் கேட்டு சுதாரித்த உதயநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் தீப்பெட்டி சின்னத்தைச் சொல்லி துரை வைகோவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். உதயநிதியின் உளறல் பேச்சால் சிறிது நேரம் கூடத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.

உதய் இதேபோல பேசுவது முதல் முறை அல்ல. சில தினங்களுக்கு முன் ஓர் இடத்தில் பேசிய உதய் வாக்குப்பதிவு நாள் ஆகஸ்ட் 19ஆம் தேதி என்று கூறி கூடியிருந்தவர்களை எல்லாம் சற்றுநேரம் குழப்பத்தில் ஆழ்த்தினார். பிறகு அருகில் இருந்தவர் சுட்டிக்காட்டியதை அடுத்து வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 19ஆம் தேதி என்று திருத்திச் சொல்லி சமாளித்தார்.

ஜெர்மனியில் தயாராகும் டெஸ்லா கார்கள்! அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனை ஆரம்பம்!

click me!