Reserve Bank of India : கோவையில் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் உரிமத்தை தற்பொழுது RBI ரத்து செய்து அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரிசர்வ் வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் நான்கு என்.பி.எஃப்.சி நிறுவனங்களை தொடர்ந்து செயல்படுத்த தடைவித்துள்ளது. NBFC என்பது Non-Banking Financial Company என்பதை குறிக்கும். அதாவது வங்கி அல்லாத நிதி நிறுவனமாக அவர்கள் செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கின்றது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் நான்கு நிறுவனங்களின் NBFC ரெஜிஸ்ட்ரேஷனை தற்பொழுது ஆர்பிஐ ரத்து செய்துள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த கண்டில்ஸ் மோட்டார் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தை சேர்ந்த நித்யா பைனான்ஸ் லிமிடெட், பஞ்சாப்பை சேர்ந்த பாதியா ஹயர் பர்சேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஜுவான் ஜோதி டெபாசிட் அண்ட் அட்வான்ஸ் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கான உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது.
6 அலவன்ஸ்களில் மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. என்னவெல்லாம் தெரியுமா?
நித்தியா பைனான்ஸ் லிமிடெட்
Zaubacorp என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த நித்யா பைனான்ஸ் லிமிடெட் என்கின்ற நிறுவனமானது கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இந்த நிறுவனம் பதிவும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நித்யா பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வங்கி அல்லாத பிற நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் சுமார் 2.5 கோடி என்றும் செலுத்தப்பட்ட மூலதனம் 74.69 லட்சம் என்றும் அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்பிஐ விதித்துள்ள இந்த தடையினால் இனி இந்த நான்கு நிறுவனங்களும் எந்த விதமான வர்த்தகத்தையும், செயல்பாடுகளையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
இது ஒருபுறம் இருக்க ஆர்பிஐ ஆனது ஐடிஎப்சி பஸ்ட் வங்கி லிமிடெட்க்கு சுமார் ஒரு கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அபராதமானது கடன்கள் மற்றும் முதலீடுகள் சட்ட மற்றும் பிற கட்டுப்பாடுகள் குறித்த மத்திய வங்கியால் வழங்கப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதற்காக விதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
RBI Repo Rate : ரெப்போ வட்டி விகிதம்..ரிசர்வ் வங்கியின் முடிவு.. வீட்டுக்கடன் EMI அதிகரிக்குமா?