பழனியில் பஞ்சாமிர்தம் விற்றும், குதிரையில் சவாரி செய்தும் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

By Velmurugan s  |  First Published Apr 6, 2024, 6:14 PM IST

திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா பழனியில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும், குதிரை வண்டி இயக்கியும் வாக்கு சேகரித்தார்.


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க கூட்டணியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று காலை பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவர் சிலை, பேருந்து நிலையம், பாலசமுத்திரம், பாப்பம் பட்டி, நெய்காரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை துவங்கினர். 

Latest Videos

undefined

அப்போது பேசிய திலகபாமா, மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டம் என மாற்றி வருவதாகவும், சாராயக்கடையை திறக்க முயற்சிப்பவர்களை துரத்தி விட வேண்டும். பழனி அடிவாரப் பகுதியில் கிரிவல பாதையில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாட்டையும் செய்யப்படவில்லை. 

மோடி மீண்டும் பிரதமரானால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தளங்கள் உடைக்கப்படும்; திருமாவளவன் எச்சரிக்கை

சாமானியர்களுக்கு பிரச்சனை என்றால் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஓடி வருவார்கள். ஆனால் இப்போது இருக்கும் கம்யூனிஸ்ட் கார்கள் வேற மாதிரி உள்ளனர். நேற்று விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் கட்டுவதில் திமுக அரசு ஊழல் செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பேசினார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி பியூஸ் போனவர் - ராதிகா சரத்குமார் பரபரப்பு பேச்சு

தொடர்ந்து பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை செய்யாதவர்களை தூக்கி எறிந்து விட்டு எப்போதும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று பாமக, பாஜக கூட்டணி தான் என்று கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.  திண்டுக்கல் தொகுதியில் 4 அமைச்சர்களை தூக்கி எரிந்து விட்டு மாம்பலம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டு கொண்டார். தொடர்ந்து அடிவாரம் பகுதிகளில் கடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு பஞ்சாமிர்த விற்பனை செய்யும் கடைகளில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும், குதிரை வண்டியை இயக்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

click me!