இரு பிரிவினரிடையே மோதல்; தடியடி நடத்தி திருவிழாவை முடித்து வைத்த போலீஸ் திண்டுக்கல்லில் தொடர் பதற்றம்

By Velmurugan s  |  First Published Apr 5, 2024, 1:29 PM IST

திண்டுக்கல் முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டி அடித்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு சமூக மண்டகப்படியில் பல அவதாரங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்த முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

தொடர்ந்து  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று வந்தது, திருவிழாவின் கடைசி நாளான நேற்று கிடா வெட்டுதல், அக்னிசட்டி எடுத்தல், அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு பின் இரவு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் முத்தாலம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருக்கும் வழுக்கு மரத்தில் ஏறும் நிகழ்வுக்கு பின்பே அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து தாரை தப்பட்டை, வானவேடிக்கைகள் முழங்க மஞ்சள் நீராடி முளைப்பாரி ஊர்வலத்துடன் கடைவீதி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு வந்த முத்து மாரியம்மன் முன் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை அருகே மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; பசியின் கொடுமையால் நிகழ்ந்த சோகம்?

இந்நிலையில் கடந்த 10-நாள் திருவிழாவின் போது குறிப்பிட்ட இரு பிரிவினருக்கிடையே இருந்து வந்த பகை முற்றி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் இரு பிரிவாக பிரிந்தே கலந்து கொண்டனர், அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ளும் வகையில் கும்பலாக மாறி மாறி சராமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் திடீரென அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. 

தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழலையே சட்டபூர்வமாக செய்த கட்சி தான் பாஜக - கனிமொழி விமர்சனம்

காவல் துறையினரின் கையை மீறி சண்டை தொடரவே அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி காவல்துறையினர் உதவியுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியை அவசர அவசரமாக  முடித்து திருவிழாவை நிறைவு செய்தனர்.

தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

click me!