பொதுமக்கள் மத்தியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திலகபாமா ஒவ்வொரு நாளும் புதுவிதமான யுக்திகளை அமைத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் நான் தான் சிறந்தவர் என நிரூபித்தவர் கருணாநிதி என திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடக்கூடிய சின்னம் பொதுமக்கள் மத்தியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமகவின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
undefined
இதையும் படிங்க: எனக்கு பிரச்சாரம் முக்கியமல்ல! தொகுதி மக்கள் தான் முக்கியம்! மருத்துவமனைக்கு விரைந்த பாமக வேட்பாளர்!
இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவர் ஒவ்வொரு நாளும் புதுவிதமான யுக்திகளை அமைத்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கொடைக்கானல் ரோப் கார் சேவை, மாம்பழ தொழிற்சாலை அமைப்பது, 30 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு, சாலை வசதி என அந்தந்த பகுதி மக்களின் குறைகளுக்கு ஏற்றார் போல் வாக்குறுதிகளை அறிவித்து வாக்காளர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை: திலகபாமா காட்டம்!
இந்நிலையில் சிலுவத்தூர், மடூர், புகையிலைப்பட்டி அதிகாரிபட்டி போன்ற கிராமங்களில் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜகாபட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும்போது தம்பக் குளத்துப்பட்டி பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் பெண்கள் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற வேட்பாளர் திலகபாமா அவர்களுடன் இணைந்து நாற்று நடவு செய்து கிராமிய பாடல் பாடி அவர்களிடம் மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
விவசாயிகளுடன் ஒருத்தியாக நாற்று நட்ட பொழுது! pic.twitter.com/S4xRRWG8Pz
— திலகபாமா (@THILAGABAMA)
தொடர்ந்து விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு உதாரணம் ஒருமுறை ரேசன் கடையில் மூட்டைகளில் இருந்த சீனி காணாமல் போனது குறித்து கருணாநிதியிடம் கேட்டதற்கு சீனியை எறும்பு தின்று விட்டது என்று கூறினார். சரி சீனியை காணவில்லை என்றால் அந்த சாக்கு பைகள் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு சாக்கு பையை கரையான் தின்றுவிட்டது என்று சாமர்த்தியமாக பதில் அளித்து விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் நான் தான் சிறந்தவர் என நிரூபித்தவர் கருணாநிதி என கூறினார்.