
Tamil Nadu paddy procurement issue : தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகியவற்றில் சம்பா சாகுபடி முக்கியமான நெல் பயிர் பருவமாகும். இது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகக் கருதப்படும் டெல்டா பகுதியில் பெரும்பாலான விவசாயிகளின் முதன்மை வருமான மூலமாக உள்ளது. இந்தநிலையில் இந்தாண்டு பல இடங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைமூட்டையாக நெல் குவிந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22ஆம் தேதி தஞ்சாவூரில் பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதை எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர். அப்போது காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அவர் ஆய்வு செய்தபோது, வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் விவசாயி, மழையில் முளைத்த நெல்களை காண்பித்து கண்ணீர் விட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகள் படும் துயரத்தையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல்மணிகள் குவியலாக குவிக்கப்பட்டு முளைவிட்டு இருந்ததையும், இந்த தீபாவளி, விவசாயிகளின் கண்ணீர் தீபாவளியாக மாறியதையும் கட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க இந்த அரme வலியுறுத்தினேன்.
நெல் சிறிதளவு முளைத்தால் என்ன ? நாத்து நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்துவிட்டாலே அது வீண் தானே என விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை வேகன்களில் அனுப்பும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது நெல் கொள்முதல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாகவும், அவரிடம் நெல்மணிகள் முளைத்துள்ளதை காட்டிய பெண் பூங்கொடி குத்தகை சாகுபடி செய்து வருபவர் என்றும், அவர் இன்னும் அறுவடை பணியையே மேற்கொள்ளாதபோது, அவர் எப்படி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக அந்த பெண் விவசாயி பூங்கொடி கூறுகையில், நான், நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் முளைச்சிட்டுன்னு சொன்னதா சொல்றாங்க. நான் அப்படிச் சொல்லல. தீபாவளிக்கு 10 நாள் முன்னாடியே எங்க நெல் அறுவடைக்கு வந்திருச்சி. சென்டர்ல நெல் கொள்முதல் செய்யாததால நான் அறுவடை செய்யல. எடப்பாடி பழனிசாமி அய்யா வந்தபோது, வயலிலேயே முளைச்ச நெற்பயிரை எடுத்து வந்து, 'கொள்முதல் தாமதமானதால நான் அறுவடை செய்யாமல் இருந்தேன். இப்போ மழையில நெற்பயிர் முளைச்சி பாதிச்சிருக்கு'னு என் நிலைமையைச் சொன்னேன் என தெரிவித்துள்ளார்.