கூட பிறக்காத அண்ணனாக சொல்கிறேன்! உதயநிதியின் சென்டிமென்ட் ஸ்பீச்!

Published : Sep 15, 2025, 01:34 PM IST
udhayanidhi stalin

சுருக்கம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 32 இணையர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார். திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது. 

சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணையர்களுக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், மேயர் பிரியா, எம்எல்ஏ கருணாநிதி, மயிலை வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

32 ஜோடிகளுக்கு திருமணம்

திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் 70,000 மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சேகர்பாபு வெள்ளி வேல் வழங்கினார். இதனையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அறநிலையத்துறை சார்பில் 32 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் 193 இணையர்களுக்கு இன்று திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 1000 இணையர்களுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்றுடன் அதை நிறைவேற்றியும் விட்டார்.

எனக்கும் காதல் திருமணம் தான்

என் அருகில் இருந்து இணையர்களிடம் எப்படித் தெரியும் கேட்டேன், காதல் திருமணம் என்று சொன்னார்கள். காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கும் காதல் திருமணம் தான். முதலில் பெண் ஒற்றுக்கொள்ள வேண்டும், பிறகு அவர்களின் பெற்றோர்களை சமாதானப்படுத்த வேண்டும், பிறகு பெண்ணின் மாமா சித்தப்பா உள்ளிட்டோர் புதுப்புது பிரச்சினைகளுடன் வருவார்கள். அவர்களின் சம்மதத்தை பெற்ற பிறகு, திருமணம் செய்ய வேண்டும்.

இது அறநிலைத்துறை, அன்பு நிலையத்துறையா? என்று தெரியாத அளவிற்கு காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது. மணமகன்களின் பெற்றோரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர்தான் இருக்கும். ஆனால் இப்போது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் இருப்பதில்லை. அவர்கள் பெற்ற பட்டங்களின் பெயர்கள் தான் உள்ளது. திராவிட இயக்க தலைவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் உள்ளிட்டோர்தான் காரணம். மகளிருக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு திட்டத்தை எப்படி அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதை மகளிரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை

அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்னோடியாக இருக்கக் கூடியவர் தான் நமது முதலமைச்சர். 1.15 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 40 சதவீதம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் தான். இதுபோன்ற பல திட்டங்கள் தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னோடி மாநிலமாக 11.1 சதவீதத்துடன் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. ஏழை எளிய குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நாம் கல்லூரிகளை திறந்தால், கோயில் நிதியில் கல்லூரி திறக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தொடர்ந்து கேட்கிறார். கோயில் நிதியைக் கல்விக்கு பயன்படுத்தக்கூடாது என்று அவர் கூறுகிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் நீதிமன்றம் கல்விக்கு அறநிலையத் துறை நிதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது.

அறநிலையத்துறை நிதி

இன்றைக்கு திருமணங்கள் நடத்துவதற்கு கூட, அறநிலையத்துறை நிதியில் எப்படி திருமணம் நடத்தலாம் என்று அவர் கோபித்துக் கொள்ள கூடும், இன்றைக்கு கேள்வி எழுப்பினாலும் எழுப்புவார். அப்படித்தான் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட மாடலின் சாதனைகள் அவரின் கருணை உறுத்திக் கொண்டிருக்கிறது. உங்களிடம் கூடப் பிறக்காத அண்ணனாக அறிவுரை சொல்கிறேன், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் சுயமரியாதையுடனும், எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதற்கு விட்டுக் கொடுத்தும், விட்டுக்கொடுக்க வேண்டாதவற்றுக்கு விட்டுக் கொடுக்காமலும் நீங்கள் வாழ வேண்டும். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். திராவிட மாடல் அரசும் முதலமைச்சரும் போல நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!