கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...! தனியார் பள்ளி ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

By Ajmal KhanFirst Published Jul 18, 2022, 8:03 AM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிகழ்வில் வேதியியல் மற்றும் கணித ஆசிரியைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவி மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி சின்ன சேலம் பகுதியில் சக்தி என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடலூரை சேர்ந்த மாணவி ஶ்ரீமதி விடுதியின் மாடியில் இருந்து குதித்து கடந்த 13 ஆம்  தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உடலை பெறாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மாணவி மரணம் தொடர்பாக சின்ன சேலம் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அப்போது மாணவியின் அறையில் இருந்து மாணவி எழுதியதாக கடிதம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் நேற்று மிகப்பெரிய வன்முறையாக மாறியது. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கள்ளக்குறிச்சி விவகாரம்.. திமுக ஆட்சி வந்தது முதலே இப்படித்தான் நடக்குது.. போட்டுத்தாக்கிய வானதி சீனிவாசன்!

பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்

மேலும் மாணவி மரணம் தொடர்பாக நீதி வேண்டிய நடைபெற்ற போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் கூடிய நிலையில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தனர். இதனையடுத்து காவல்துறை தடியடியால் கூட்டம் சிதறி ஓடியது. அப்போது பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கும்பல் பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தது. மேலும் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காழி, மின்விசிறி, ஏசி ஆகியவற்றை தூக்கி எரிந்தும் திருடிக்கொண்டும் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டக்கார்ர்களை அதிரடிப்படையினர் அடித்து விரட்டினர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 190க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்... பள்ளி தாளாளர் உட்பட மூவர் கைது!!

பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் கைது

இந்தநிலையில் நேற்று பள்ளி தாளாளர் குமார்,செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து மாணவி இறப்பிற்கு முன்பாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இருவரும் ஒழுங்காக படிக்காததால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த இரண்டு ஆசிரியைகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாணவி ஶ்ரீமதி உடன் படித்த மாணவிகளையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

இதையும் படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவர விஷமிகள் யார்.? தூண்டிவிட்டவங்களுக்கு இருக்கு.. இபிஎஸ் புகாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

 

click me!