இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி...

Asianet News Tamil  
Published : Feb 20, 2018, 04:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி...

சுருக்கம்

Two private buses crash into collision

திருப்பூர் கொடுவாய் பகுதியில் இரு தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

திருப்பூர் மாவட்டம் சத்தி என்ற ஊரிலிருந்து தாராபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதேபோல் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. 

இந்நிலையில் திருப்பூர் கொடுவாய் பகுதியில் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளனது. இதில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

சில்ற ஐ.டி. விங்.. நம் எதிரிகள்..! திமுகவை கண்ணா பின்னாவென்று தாக்கிய காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
பள்ளி மாணவர்களே இன்றுடன் கடைசி நாள்.. ரூ.10,000-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!