கிரிமினல்களிடம் சண்டைபோட்டது லாவண்யாவின் தவறா?

First Published Feb 20, 2018, 2:27 PM IST
Highlights
Lavanyas faction fighting with criminals


அம்மாம் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்திஜி! அப்பாலிக்கா சொன்னார் ‘என்னைக்கு இந்த தேசத்துல நிறைய நகைகளை அணிந்த ஒரு பெண் நள்ளிரவில் தனியாக சாலையில் பயமின்றி, பாதுகாப்பாக நடந்து செல்கிறாரோ அன்றைக்குதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.’ என்று. மெய்யாலுமே ஷோக்கான இஸ்டேட்மெண்டுதான் அது.

இன்னாபா சென்னை தமிழ்ல நியூஸ அடிச்சு வுடுறியே!?ன்னு மெர்சலாவாதீங்க. மேட்டரே சென்னை  பெண் பத்தினதுதானே!

நம்ம சென்னையில ரியல் எஸ்டேட் ரேட்டை கன்னாபின்னான்னு ஏத்திவுட்டது இந்த ஐ.டி. கம்பெனி ஆளுங்கதான். கொளுத்த சம்பளம் இவங்க கையில புரளுறது தெரிஞ்சதும், அவங்களை குறி வெச்சு பல தொழிலுங்க பெருகிப்போச்சு தலை நகர்ல. அதே மாதிரி சிட்டியில அப்பப்ப க்ரைம் ரேட்டை ஏத்தி வுடுறதும் இதே ஐ.டி. குரூப்புதான். ஐ.டி. பொண்ணுங்களை மையமா வெச்சு அடிக்கடி நகை பறிப்பு, வெட்டுக் குத்து, அடிதடின்னு பஞ்சாயத்துகள் பரபரத்துட்டே இருக்கும்.

லேட்டஸ்டா இதுல சீரியஸா சிக்கி தமிழ்நாட்டையே அதிர வெச்சவர் லாவண்யா. தாழம்பூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான இவர் பெரும்பாக்கம் சாலையில் பின்னிரவில் மிக மோசமாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.

லாவண்யா தாக்கப்பட்டது எப்படி? ஆள் அரவமில்லாத அந்த சாலையில் பின்னிரவில்  அவர் சென்றதே தவறு! என்கிறது போலீஸ். இது பற்றி மேலும் பேசும் போலீஸ்...அன்றைக்கு இரவில் ஆபீஸில் மீட்டிங் முடிந்து கிளம்பும்போது பத்தரை மணியாகி இருக்கிறது. ஆபீஸில் ‘கால் டாக்ஸி புக் பண்ணி தர்றோம்’ என்று சொல்லியும் கேட்காமல் தனியாக டூவீலரில் சென்றிருக்கிறார். ஆன் தி வேயில் தன் பின்னடியே சில நேரமாக வந்து கொண்டிருந்த பைக் நபரிடம் நின்று ‘ஏன் ஃபாலோ பண்ற?’ என்று சண்டையும் போட்டிருக்கிறார்.

தாழம்பூர் - பெரும்பாக்கம் சாலையில அரசன்கழனி அப்படிங்கிற இடத்துல் தன் வண்டியை வழி மறிச்ச விநாயகமூர்த்தி அப்படிங்கிற ரெளடியிடம் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார் லாவண்யா. செயினையும், பர்ஸையும் பறித்த விநாயகமூர்த்தியிடம் இவர் கடுமையாக சண்டை போட்டபோதுதான் மறைவில் நின்ற நாராயணமூர்த்தியும், லோகேஷும் வந்து லாவண்யாவை தாக்கியுள்ளனர். கிரிமினல்கள் தள்ளியதில் ரோட்டில் விழுந்து, தரையில் அடிபட்டிருக்கிறது அவருக்கு.

கிரிமினல்களுடன் தைரியமாக போராடிய லாவண்யாவை பாராட்டுகிறோம்! ஆனால் அந்த இரவு நேரத்தில் அப்படிப்பட்ட ஒதுக்குபுற சாலையில் தனியாக சென்றது லாவண்யா செய்த பெரிய தப்பு. அதேபோல் தன்னை முற்றுகையிட்ட கிரிமின்ல்களிடம் தனியாளாக அவர் சண்டையிட்டது அதைவிட தப்பு.  பணம் போனாலும்

பரவாயில்லை என்று அந்த இடத்தை விட்டு உயிர், உடலுக்கு ஆபத்தில்லாமல் அவர் தப்பியிருக்க வேண்டும்.

வீரத்தை விட விவேகம் சிறந்ததல்லவா!” என்கிறார்கள்.

யோசிக்க வேண்டிய விஷயம்தானே!

click me!