இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர தீ விபத்து.!சம்பவ இடத்திலேயே துடி,துடித்து உடல் கருகி 2 பேர் பலி

By Ajmal KhanFirst Published Aug 11, 2022, 11:44 AM IST
Highlights

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் லாரிகளில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

நேருக்கு நேர் மோதிய லாரிகள்

வாகன விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிகைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நான்கு சாலை, எட்டு சாலை என போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் நேருக்கு நேர் மோதாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவே ஒரு நேரத்தில பிரச்சனையாகவும் மாறிவிடுகிறது. சாலைகள் வெறிச்சோடி இருப்பதால் வேகமாக வாகனத்தை இயக்குவதால் விபத்தும் ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் காற்றாலையின் உதிரி பாகங்களை இறக்கி விட்டு டாரஸ் லாரி ஒன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி எதிர் பகுதியில் உள்ள சாலைக்குள் புகுந்தது.

தீயில் கருகிய லாரிகள்

இதன் காரணமாக  திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூருக்கு சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இரண்டு லாரிகளும் தீயானது பரவியது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த மற்ற வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தனர்.  இந்நிலையில் டாரஸ் லாரியில் இருந்த ஒருவர் உடலில் பற்றி எரியும் நெருப்புடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்.! முதலமைச்சர் அழைப்பு கேலிக்கூத்தாக உள்ளது...சீறிய ஆர்.பி.உதயகுமார்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது கட்டுக்குள் வராத காரணத்தால் மற்ற பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களும் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை சோதனை செய்த போது மேலும் ஒருவர் உடல் கருகி உயிர் இழந்து கிடந்தது தெரியவந்தது.

விபத்தில் சிக்கி 2 பேர் பலி

கிரேன் உதவியுடன் லாரியில் சிக்கி இருந்தவரின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியை சேர்ந்த இந்திர மணிபால் (37) (டாரஸ் லாரி ஓட்டுநர்), உதவியாளர் பவன் பட்டேல் (25) ஆகியோர் என்பது தெரியவந்ததை அடுத்து இருவரின் உடல்களையும் துவரங்குறிச்சி போலீசார் மீட்டு பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கோர விபத்து தொடர்பாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி அம்பிகா, கூடுதல் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். 

இதையும் படியுங்கள்

பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் கெஜ்ரிவால்...! உற்சாகத்தில் திமுகவினர்

 

click me!