அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு.. ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் தங்கம் கண்டெடுப்பு

By Thanalakshmi VFirst Published Aug 11, 2022, 10:49 AM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டு திரடு பகுதியில் 1 செ.மீ அளவிலான தங்கம் கிடைத்துள்ளது. 
 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டு திரடு பகுதியில் 1 செ.மீ அளவிலான தங்கம் கிடைத்துள்ளது.  முன்னதாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வில், இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கத்திலான பட்டயம், வெண்கலம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்திருந்தன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிவகளை அகழாய்வில் வாழ்விடப்பகுதியில் தங்கம் கிடைத்துள்ளது. சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டும் முதல் கட்ட அகழாய்வும் 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.

மேலும் படிக்க:ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம், வெண்கலம் கண்டெடுப்பு.. தங்கத்திலான பட்டயம் கிடைத்ததாக தகவல்

இதில் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், வட்ட சில்லுகள், மண் சட்டிகள், மண் பானைகள், சங்கு பொருள்கள், நூண் கற்கருவிகள்,  இரும்பு பொருட்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல் பொருட்கள் முதல்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன. இது போல் சிவகளை சுற்றியுள்ள 9 இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன.இதில் 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள்,வாள் , கத்தி, நெல்மணிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்த நெல்மணிகளை கொண்டு அதன் கலாம் சுமார் 32,000 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!

இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரூ29 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகளை பரம்பு, திரு மூலகரை, பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகியவற்றை புதைவிட பகுதியாகவும் வாழ்விட பகுதியாகவும் இரண்டாக பிரிந்து அகழாய்வு பணிகள் நடைபெற்றன. கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த அகழாய்வில் வட்ட சில்லுகள், தக்ளி, எலும்பிலான கூர்முனை கருவிகள், பாசி மணிகள், வளையல்கள், முத்திரைகள், சக்கரம், காதணிகள், புகைப்பான்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வந்த் அகழாய்வில் தங்கத்தினால் ஆன சிறிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுளது.

மேலும் படிக்க:மாமல்லபுரம் பண்ணையில் இருந்து குஜராத்திற்கு செல்லும் 1000 முதலைகள் - நீதிமன்றம் அனுமதி

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகழாய்வில் முதல்முறையாக தங்கத்திலான பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதினிடையே புதைவிட பகுதியான சிவகளை பரம்பு பகுதிகளில் தோண்டப்பட்ட 10 குழிகளில் கண்டெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருள்களை கண்டறியும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

click me!