எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்.! முதலமைச்சர் அழைப்பு கேலிக்கூத்தாக உள்ளது...சீறிய ஆர்.பி.உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Aug 11, 2022, 10:32 AM IST

போதை பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதனாவர்கள் மற்றும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட  முன்வருவரா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


போதைப்பொருள் இளைஞர்கள் பாதிப்பு

தமிழகத்தில் போதைப்பொருட்களை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியார்களிட்ம பேசுகையில், தமிழகத்திலே ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளனர், இதில் 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்து வருகின்றனர், இவர்கள் மனம் அழுத்தத்தால், குடும்ப சுமையால், கூடா நட்பால் போதைப் பொருட்களுக்கு அடிமையாக வருகின்றனர். ஏற்கனவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், திமுக ஆட்சி அமைந்த 5 வது மாதத்திலே, தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார், மேலும் இது குறித்து சட்டமன்றத்திலும் கொலை, கொள்ளை, பாலியல் போன்ற சம்பவங்கள் போதைப் பொருட்களால் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினார்.  இதற்க்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சரின் வார்த்தைகள் அழகாக உள்ளது ஆனால், செயல்பாட்டில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறினார்.

Tap to resize

Latest Videos

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

போதை பொருள் குறித்து முதலமைச்சர், காவல்துறைக்கு உத்தரவிட்டாலே போதும் ஒரே நாளில் வேட்டையாடி தடுத்து நிறுத்த முடியும் ,இது குறித்து விழிப்புணர்வு நடத்தப்படும் என்று கூறுகிறார், இது காலங்காலமாக நடைபெற்று வருகிறது ஏன் டாஸ்மாக் கடையில் கூட இது குறித்து விழிப்புணர்வு எழுதி வைத்திருப்பார்கள், விழிப்புணர்வில் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுவது  கேலி குத்தாக உள்ளது. சமூக அக்கறையோடு அரசு இதில் தீவிரம் காட்ட வேண்டும் குறிப்பாக, பள்ளி ,கல்லூரி வாசல்களில் போதை பொருள் விற்பதை தடுத்து நிறுத்த வேண்டும், குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக குற்றம் எழுந்து வருகிறது, இந்த போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் செய்யப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க முன்வர வேண்டும், அதேபோல் போதைப்பொருள் விற்பனை செய்பவரின் எத்தனை பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டது என்பதை வெள்ள அறிக்கை வெளியிட முதலமைச்சர் முன்வர வேண்டும்.

பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் கெஜ்ரிவால்...! உற்சாகத்தில் திமுகவினர்

போதைப்பொருள் கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் ஒரு கோடியே 75 லட்சம் இளைஞர்கள் உள்ளதில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் போதை பொருளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும், குறிப்பாக போக்சோ வழக்கில் கைதானவர்களும், கூட்டு பலாத்காரம் வழக்கில் கைதானவர்களும் போதை மருந்து உட் கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர், ஆகவே தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை இளைஞர்களுக்கு உருவாக்கும் வண்ணம், போதை மருந்து தடுப்பதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

மோடி சொன்னதை செய்யாத ஓபிஎஸ்- இபிஎஸ்...! நிறைவேற்றிய நடிகர் ரஜினி..! பாஜகவினர் உற்சாகம்

click me!