தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தவெக வெற்றிக்கழக கொடிக்கம்பம் ஒரு மாத காலமாக தயாரிக்கப்பட்டு 40 அடி உயரம் கொண்ட கம்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி அலுவலகத்தில் இந்த கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடியில் போர் யானைகளும், வாகை மலரும் இடம்பெற்று இருக்கிறது. கொடியை அறிமுகப்படுத்திய அவ்ர் அதன் பின்னணியில் இருக்கும் வரலாறை கூறவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அதை சொல்லுவேன் என ட்விஸ்ட் வைத்து சென்றார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியுடன் அதற்காக இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்த ஸ்பெஷல் பாடலையும் வெளியிட்டார் விஜய். அந்த பாடலுக்கு விவேக் உணர்ச்சிகரமான பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். அந்த பாடல் தற்போது யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது அதுல்ல... காப்பி சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி
தவெக வெற்றிக்கழக கொடிக்கம்பம் ஒரு மாத காலமாக தயாரிக்கப்பட்டு 40 அடி உயரம் கொண்ட கம்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரும்பு பைப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு மாத காலம் தவெகாவுக்காக இந்த கொடிக்கம்பம் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டதாகவும், கொடிக்கம்பம் தயாரித்துக்கொடுக்கும் நிறுவனத்தின் ஊழியவர் ஒருவர் தெரிவித்தார். இந்த கொடிக்கம்பம் தயாரிக்க சுமார் 5 லட்சம் ரூபாய் செலவானதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போன்று முன்னதாக திமுக, அறிவாலயம், காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட கட்சி அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தை தயாரித்தது தாங்களது நிறுனம்தான் என்றும் கார்த்திக் என்ற நபர் கூறினார்.