வேலை தேடி வந்தோர்க்கு வாழ்வளிக்கும் சென்னை, தன் 384 ஆண்டுகள் பயணத்தில் பல இடர்பாடுகளை கடந்து இன்றும் நவீனத்தையும் பழமையும் இணைத்து தலை நிமிர்ந்து நிற்கிறது. 1639-ல் மதராசபட்டிணம் என அழைக்கப்பட்ட சென்னையின் வரலாற்றை அறிந்துகொள்வோம்.
கனவை நினைவாக்கும் சென்னை
நம்பி வந்தோரை வாழவைக்கும் இடமாக சென்னை திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு குக்கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் கூட வேலை இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு சென்னை இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்து அன்பாக அரவணைத்துக்கொள்கிறது. நாள் தோறும் லட்சக்கணக்கனோர் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களின் கனவை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் பாதுகாக்கிறது.
undefined
இப்படிப்பட்ட சென்னை உருவான வரலாறு தெரியுமா.? சென்னைக்கு இன்று இருக்குற இன்னொரு மாசான பேரு தான் மெட்ராஸ், 1639-ம் ஆண்டு வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் தரை இறங்கியது. அவர்கள் தரை இறங்கிய இடம் அந்த கால கட்டத்தில் மதராச பட்டிணம் என அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை நகர் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
world tourism day 2022: தென் ஆப்பிரிக்க சுற்றுலாவில் வேகமாக வளரும் சென்னை! 2025க்குள் முக்கிய இடம்
பழமையும் புதுமையும் கலந்த சென்னை
புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் சென்னை மாநகரம் இன்று தனது 384-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. உலகின் 31-வது பெரிய நகரமாகவும், இந்தியாவின் 4-வது பெரிய நகரம் சென்னை உள்ளது. காலப்போக்கில் சென்னை நகரை சுற்றி இருந்த பல கிராமங்கள் இணைந்தே தற்போது சிங்கார சென்னையாக உருவெடுத்துள்ளது.
எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும் சென்னை மாநகரம். 2004ஆம் ஆண்டு சுனாமியோ, 2015, 2023 ஆம் ஆண்டுபெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள். அப்படிப்பட்ட சென்னையில் பல்வேறு பழமையான முக்கிய இடங்களில் அப்படியே உள்ளது. தற்போது தலைமைசெயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா ஹால், விவேகானந்தர் மண்டபம், சென்ட்ரல் ரயில் நிலையம் என பல பழமைகளும் புதுமையும் கலந்து சென்னை ஜொலிக்க வைத்து வருகிறது.
வசந்தத்தை வழங்கிடும் சென்னை
சென்னையின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.