ஜெ.வுக்கு பூசணி திருஷ்டி போடும் வேளாங்கண்ணி ஓபிஎஸ் பக்கம்; ஐ.டி ராமச்சந்திரனும் தாவினார்…

 
Published : Feb 08, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ஜெ.வுக்கு பூசணி திருஷ்டி போடும் வேளாங்கண்ணி ஓபிஎஸ் பக்கம்; ஐ.டி ராமச்சந்திரனும் தாவினார்…

சுருக்கம்

கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவின் விசுவாத தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒபிஎஸ் பக்கம் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும், அதிமுக அலுவலகம் மற்றும் ஜெ.வின் போயஸ் தோட்டம் முன்பாக முக்கிய தினங்களில் நேரடித் தொலைக்காட்சி ஒலிபரப்பின் போது பல அதிமுக தொண்டர்கள் பிரபலமானவர்கள் ஆவர் 

அதில், முக்கியமானவர் ஜெயலலிதா வெளியே செல்லும் போதும், மீண்டும் வீட்டுக்கு வரும் போதும் பூசணிக்காயை சுற்றி திருஷ்டி போடும் கஸ்தூரி என்கிற வேளாங்கண்னி ஆவார்.

சென்னை சேத்துப்பட்டு மகளிரணி கவுன்சிலராக இருந்த இவரை அதிமுக தொண்டர்கள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு எப்போதும் போயஸ் தோட்ட இல்லம், அல்லது கட்சி அலுவலகம் முன்பாக நின்று கொண்டு இருப்பார்.

ஜெவின் தீவிர விசுவாசியான இவர், தற்போது ஒபிஎஸ் பக்கம் தாவியுள்ளார்.

கஸ்தூரி, ஒபிஎஸ் பக்கம் தாவி உள்ளது அதிமுக மகளிரணியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கஸ்தூரி மட்டுமின்றி தென் மாவட்டத்தைச் சேர்ந்த மீசைக்கார பெரியவர் ஒருவர், சசிகலாவால் கட்சிக்கு கொண்டுவரப்பட்ட ஐ.டி விங்க் ராமச்சந்திரன், புதுவை முன்னால் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோரும் ஒபிஎஸ் பின்னால் சென்று விட்டனர்.

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இல்லாமல் உயிர் நாடியாக விளங்கக் கூடிய இந்த அதிமுக தொண்டர்கள் ஒபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் மேலும் ஏராளமானோர் ஒபிஎஸ் பக்கம் சாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!