
செய்தியாளகளிடம் பேசிய முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் நெருப்புடா! நெருங்குடா! பானியில் அடித்து நொருக்கினார்.
செய்தியாளரகளின் கேள்விகளை அசால்டாக லெஃப்டில் வாங்கி ரைட்டில் தூக்கிப் போட்டார்.
அந்த அளவுக்கு உடனுக்குடன் தீப்பொறியாய் பதில்கள் பறந்தன.
உங்கள் பின்னால் பாஜக இருக்கிறதா? என்ற கேள்விக்கு அப்பட்டமான பொய் என்றுக் கூறினார்.
ஜெ மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்படும் என்று மிகப்பெரிய வார்த்தையை உதிர்த்து இருக்கிறார்.
அப்போது, அங்கு வந்த கே.பி. முனுசாமி, பி எச் பாண்டியன், மற்றும் பல மூத்த தலைவர்கள் ஒபிஎஸ்க்கு சால்வை அணுவித்து மரியாதை செய்தனர்
இதனால் அதிமுக சர்க்காரமே கதிகலங்கி போயுள்ளது.
சினிமாவில் வருவதுபோன்று நிமிடத்திற்கு நிமிடம் ஒபிஎஸின் ரேட்டிங்க் எகிறிக் கொண்டே போகிறது.
வெளிப்படியாக 3 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில் மிகத் தைரியமாக சட்டமன்றத்தில் எனது மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று சொல்கிறார் ஒபிஎஸ்.
தான் எப்போதும் ஜெவின் வழிமுறைகளை பின்பற்றுவதால் மிக நாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தொண்டர் மற்றும் அனைத்து மக்களுக்கு சசிகலா கோஷ்டியின் பித்தலாட்டங்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மேலும், பொதுமக்களை வீடு வீடாக, கிராமம் கிராமமாக நான் சந்திக்க உள்ளேன்” என்றும் தெரிவித்தார்.