
குதிரை பேரம் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் இதற்குமுன் இல்லாத நிகழ்வாக, கர்நடகா ஆந்திராவில் நடைபெறுவது போன்று குதிரைபேரம் தொடங்கி விட்டது. எம்எல்ஏ-க்களின் ரேட்டிங்க் எகிறிவிட்டது.
தற்போது பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் அங்கு செல்லலாமா? இங்கு செல்லலாமா? என ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பாக யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்று அவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது. 70 க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மதில்மேல் பூனையாக தான் உள்ளார்காள்.
அதற்கான முக்கிய காராணமே எங்கு சென்றால் தங்களுக்கு நல்ல பதவியும், மரியாதையும் கிடைக்கும் என்பதுதான்.
அமைதிப் புயலாக இருந்த ஒபிஎஸ் அதிரடி புயலாக மாறியுள்ள இந்த நிலையில் சிலபல அரசியல் கட்சிகளின் ஆதரவு ஒபிஎஸ்க்கு அமோகமாக இருக்கிறது என தெரிகிறது.
அந்த சிலபல அரசியல் கட்சிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாக சாம, பேத, காம, தண்டம் என அனைத்து வகைகளிலும் உதவுவதற்காக தயாராக உள்ளன.
இப்படி, ஒபிஎஸ்க்கு கட்சியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, சமீப காலத்தில் மக்களுடன் உருவாகியுள்ள மக்கள் செல்வாக்கு மேலும் சிலபல கட்சிகளின் மறைமுக ஆதரவு ஆகியவை எல்லாம் சேர்ந்து மீண்டும் ஒபிஎஸ்ஸே மைனாரிட்டி அரசு அமைக்கும் அளவிற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தால் கூட ஆச்சரியமில்லை என சொல்கிறார்கள் உள்விவகாரம் நன்கு அறிந்தவர்கள்.
ஒபிஎஸின் அதரடி அறிவிப்பால் சில பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்சியில் இருந்தும், மாநில கட்சியில் இருந்தும் ஒபிஎஸ்க்கு ஒருமித்த ஆதரவு தெரிவித்து இருப்பதால் நிச்சயம் அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய குடைச்சல் மட்டுமின்றி அவர்களது அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது.
ஆளுநர் தற்போது மும்பையில் ஆலோசனையில் உள்ள நிலையில் ஒபிஎஸின் அதிரடி ஆட்டத்தால் சட்டசபை முடக்கப்படும் நிலையுள்ளது.
டையில் பீஸ் :
“சிலபல அரசியல் கட்சிகள்” என்பது ஒபிஎஸ் அடிக்கடி சொல்லும் வார்த்தை.