மிடாஸ்க்காக திமுகவைச் சந்தித்தது யார்? சசிகலாவுக்கு ஓபிஎஸ் சரமாரி கேள்வி

Asianet News Tamil  
Published : Feb 08, 2017, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
மிடாஸ்க்காக திமுகவைச் சந்தித்தது யார்? சசிகலாவுக்கு ஓபிஎஸ் சரமாரி கேள்வி

சுருக்கம்

ஓ.பன்னீர் செல்வத்தின் அதிரடி சரவெடிகளைத் தொடர்ந்து அதிமுக தரப்பு ஆடிப் போய் உள்ளது. சசிகலா முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த கடுப்பில் வீட்டை விட்டு வெளியே வந்த சசிகலா ஒ.பன்னீர் செல்வத்தை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கினார்.

திமுக தான் ஒ.பன்னீர் செல்வத்தை பின்னால் இருந்து இயக்குகிறது. ஒபிஎஸும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்கிறார்கள் என சசிகலா தெரிவித்தார்.

தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிவிட்ட ஓபிஎஸ் சும்ம இருப்பாரா? சசிகலாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக ஆதரவாளன் நான் அல்ல. சசிகலா தான் மிடாஸ் ஆலைக்காக திமுகவினரைச் சென்று சந்தித்தார்.

எனவே, அதிமுகவினருக்குத் தெரியும் யார் திமுகவின் பக்கம் இருந்தனர் என ஓபிஎஸ் காட்டமாகத் தெரிவித்தார்.

ஒபிஎஸ் பதிலடி குற்றச்சாட்டுகள் அதிமுக தரப்பில் மேலும், பல விளைவுகளைச் செய்துள்ளது.

இதுபோல மேலும் பல குற்றசாட்டுகளை ஒபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் சொல்ல இருப்பதால் மேலும் பற்பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் சசியின் கனவுக்குக் ஒட்டு மொத்தமாக வேட்டு வைத்துவிட்டார் ஓபிஎஸ் என சொல்லலாம்.

PREV
click me!

Recommended Stories

Power Cut: வாரத்தின் முதல் நாளான திங்கள் (06.07.2026) எங்கெல்லாம் பவர் கட்.. காலை 9 முதல் மாலை 5 மணி வரை!
DMK To TVK: திமுக முக்கிய பிரமுகரின் மகன் தவெகவில் ஐக்கியம்.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.. உதயநிதி!