சசிகலாவின் குடும்ப ஒற்றுமை கலைந்தது: ஒபிஎஸ்க்கு குவியும் எம்எல்ஏக்கள் ஆதரவால் பரபரப்பு…

 
Published : Feb 08, 2017, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
சசிகலாவின் குடும்ப ஒற்றுமை கலைந்தது: ஒபிஎஸ்க்கு குவியும் எம்எல்ஏக்கள் ஆதரவால் பரபரப்பு…

சுருக்கம்

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றுத் தெரிவித்தார். அவர் சொல்லி முடித்து 10 மணிநேரம் முடியவில்லை. அதற்குள் 3 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக ஒபிஎஸ்க்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தவிர்த்து மேலும் சில எம்எல்ஏக்கள் ஒபிஸ் பக்கம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதனெ அவரது ஆதரவு எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதனால் சசிகலா சொன்ன அந்த வார்த்தை சுக்கு நூறாக நொருங்கி விட்டது.

134 எம்எல்ஏக்களில் வெளிப்படையாக 3 பேர் வெளியேறிய சூழ்நிலையில் இன்னும் 20க்கும் மேல் ஒபிஸ் பக்கம் வர இருப்பதாக வந்த தகவலால் பரப்பு தொற்றிக் கொண்டுள்ளாது.

மொத்தமுள்ள 134 பேரில் 16 எம்எல்ஏக்கள் குறைந்துவிட்டாலே அதிமுக ஆட்சி அவுட். அந்த 16 பேரில் 3 பேர் ஒபிஎஸ்க்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சசிகலாவுக்கு மீதமுள்ள 131 பேரின் முழுமையான ஆதரவு கிடைக்க வேண்டும்.

அப்படியிருந்தால் தான் நிம்மதியான ஆட்சி நடத்த முடியும். இல்லையெனில் நாள் முழுவதும் பயத்தில் அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள், கட்சி தலைமையை மிரட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை

எது எப்படியோ முதலமைச்சர் ஒபிஎஸ் கொளுத்திப் போட்ட சரவெடியால்  இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது சசிகலா தலைமையிலான அதிமுக.

மைத்ரேயன் எம்பி பேசும்போது, “பிரச்சனை ஆரம்பித்து 10 மணிநேரம் முடியவில்லை, ஒவ்வொரு விளைவுக்கு ஒரு எதிர்விளைவு இருக்கும். நேரம் செல்ல செல்ல இன்னும் பல சட்டமமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும்” என்று சொல்வதையும் தவிர்த்து விட முடியாது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!