இறந்தவர்கள் உடலை தண்ணீரில் மிதந்தே சுமக்கும் அவலம்... துன்ப நீச்சலில் துயரக் கிராமம்!

By vinoth kumar  |  First Published Feb 1, 2019, 5:48 PM IST

தூத்துக்குடியில் மயானத்துக்கு செல்ல முறையான பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து கொண்டு ஓடை தண்ணீரில் மூழ்கியும் நீச்சலடித்தபடியும் சடலத்தை தூக்கிச்செல்கின்றனர்.


தூத்துக்குடியில் மயானத்துக்கு செல்ல முறையான பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து கொண்டு ஓடை தண்ணீரில் மூழ்கியும் நீச்சலடித்தபடியும் சடலத்தை தூக்கிச்செல்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து உட்பட்ட காமராஜநல்லூர் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லலை. 

Tap to resize

Latest Videos

அதனால் அப்பகுதியில் யாராவது உயிரிழந்தால் அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால், வாய்க்கால் தண்ணீரின் வழியாக சுமந்து சென்று, மயானத்தில் அடக்கம் செய்கின்றனர். மழைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது, இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய பெரிதும் சிரமப்படுகின்றனர். 

இந்நிலையில் காமராச நல்லூரில் சொர்ணம் என்ற மூதாட்டி இறந்து போனதால் அவரது சடலத்துடன் ஓடை நீரில் இறங்கி சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டது. இதையடுத்து தங்கள் ஊரில் இறந்தவர்களின் சடலங்களை எளிதாக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான சாலைவசதி கேட்டு அங்குள்ள மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது வாக்குறுதியை ஏற்று மறியல் போராட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

click me!