தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு... மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

By vinoth kumar  |  First Published Jan 9, 2019, 4:28 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 11-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடியில் நாளை தேவந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி எந்த ஒரு அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று மாலை 6 மணிமுதல் ஜனவரி 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் 5-க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு பொதுமக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள். தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. இந்த நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

click me!