ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண சென்ற நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்து, நீங்க யார் என கேட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரத்தை கட்டுப்படுவத்துவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தூத்துக்குடி சென்றார். அப்போது பண்டாரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ்குமார் என்பவர் ரஜினியை பார்த்து நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்? ரஜினியை பார்த்து கேட்டார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டு சமூகவளைதலங்களில் வைரலானது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கல்லூரியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துண்டறிக்கை கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.