
மருத்துவ கனவை சிதைக்கும் அபாயம்
தமிழகத்தில் 83 மருத்துவ இடங்கள் நிரப்பாமல் இருப்பது மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளா். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 4 கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகும் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமல் இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப் படாமல் இருக்கும் காலியிடங்களை திரும்ப வழங்க மாட்டோம்..
மருத்துவ இடங்களை திரும்ப பெறுங்கள்
என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர், சட்டவல்லுநர்களின் ஆலோசனையை பெற்று மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டிற்கான 83 மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைப்பதை உறுதி செய்வதோடு, வரும் காலங்களில் இதுபோன்று நிரப்பபடாமல் இருக்கும் மருத்துவ இடங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். .
இதையும் படியுங்கள்