கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவரும், நகைக்கடை உரிமையாளருமான சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகைக்கடை உரிமையாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான எம்.பி.சுரேஷ்ன் வீட்டில் இருந்து இன்று அதிகாலை பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் விரைந்து வந்து பார்த்த போது சுரேஷ் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
உடனடியாக இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் சுரேஷ்ன் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே காப்பகத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நிலையில், பிற வணிகர் சங்கங்கள் சார்பில் சுரேஷ்ன் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக இன்று கடைகளை அடைத்துள்ளனர். மேலும் தொழிலதிபரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.