நாம் தமிழர் கட்சிக்கு நான் துரோகம் செய்தேனா? வேதனையோடு பேசிய அமீரின் ஆடியோவை வெளியிட்ட திருச்சி சூர்யா

By Ajmal Khan  |  First Published Jul 16, 2024, 2:18 PM IST

சூட்டிங் அனுமதி வாங்க வேண்டும் என்றாலும்  10 பேரை பிடித்து 11வது ஆளை பிடித்து தான் உதயநிதியை பார்க்க முடிகிறது என இயக்குனர் அமீர் விரக்தியில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. 


சீமான்-அமீர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், இயக்குனர் அமீரும் நண்பர்கள், இரண்டு பேரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அமீருக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். அவ்வப்போது எங்கேயாவது பார்த்தால் மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வார்கள். இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு இயக்குனர் அமீர் அனுப்பிய ஆடியோவை முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

ஆடியோ வெளியிட்ட திருச்சி சூர்யா

அந்த ஆடியோவில்,  தங்களது யூடியூப் சேனல் தொடக்க விழாவிற்கு வருவதை நாம் தமிழர் தம்பிகள் விரும்பவில்லை. எனக்கும் நிறைய சங்கடங்களை தருகிறது.  கஷ்டப்பட்டு போரடி சொந்த உழைப்பில் மேலே வந்தேன். எந்தவித இஸ்லாமிய இயக்கம் ஆதரவு இல்லை. இஸ்லாமிய பணக்காரர்கள் உதவவில்லை.  நானே முட்டி மோதி நண்பர்களோடு சேர்ந்து மேலே வந்தேன். 10 ஆண்டு காலம் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தேன். கட்சிக்காரனாக இல்லை. பலமுறை சொல்லியிருந்தேன்.

ஆயிரம் இருந்தாலும் அமீர் அண்ணா நல்லவர் யா.... pic.twitter.com/8a2ItetIzN

— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa)

 


நான் துரோகியா அமீர் ஆவேசம்

சீமான் அண்ணனுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காகத்தான் தூரத்தில் இருந்தேன். ஆனால் என்னை கல்யாணசுந்தரம், ராஜிவ் காந்தி போலவும் இன்னும் பல பேர்  போலவும் உங்கள் இயக்கத்திற்கு துரோகம் செய்தவன் போல பேசுகிறார்கள். வீடியோ பதிவிடுகிறார்கள். சங்கிகள் தான்  ஏறி ஏறி அடிப்பாங்கன்னா நாம் தமிழர் தம்பிகளும் அடிப்பாங்கனா ரொம்ப மன உளைச்சலை தருகிறது.  அண்ணனிடம்(சீமான் ) சொன்ன அதை விடுடா அதையெல்லாம் மனசில் வைத்துக்கொள்ளாதே என்பார். சொல்லிவிட்டு அடுத்த வேலைக்கு போய்விடுவார்.  ஆனால் நான் இதனை கடந்து போவதற்குள் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.  

ஜாபர் ஒருத்தன் மேலே இருந்த என்னை கீழே தள்ளவிட்டான். அதில் இருந்து போராடி மேலே வந்தால் நாம் தமிழர் தம்பிகள் அடிக்கிறாங்க. இது ரொம்ப சங்கடமாக உள்ளது. அண்ணனும் நானும் ஒன்றாக படம் பார்த்தால் இந்த துரோகியை விட்டு வைக்காதீங்க என கூறுகிறார்கள். ஒரு இயக்கம் நடத்துறவங்க, எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தாங்கிட்டு போகலாம். நான் கட்சியில் கூட இல்லை. 

திமுகவால் எந்த பயனும் இல்லை

நீங்கள் கூட விமானநிலையத்தில் என் கூட போட்டோ எடுத்தீங்க, பதிவிட்டீங்க, நான் போட கூட சொல்லவில்லை. தம்பிகள் திட்ட ஆரம்பித்ததும் நீங்களும் எனக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டீர்கள். என்னைய திமுக காரன் என கூறுகிறார். திமுகவினர் கட்சியில் சேர்த்துட்டு பொறுப்பு கொடுத்து மாத வருமானத்திற்கு ஏற்பாடு செய்கிறார்களா.? 10 பைசா கூட இல்லை. சூட்டிங் அனுமதி வாங்க வேண்டும் என்றாலும்  10 பேரை பிடித்து 11வது ஆளை பிடித்து தான் உதயநிதியை பார்க்க முடிகிறது. திமுகவில் எம்எல்ஏ மந்திரியாக நான் போய்விடுவேன் என கூறுகிறார்கள். 

ஜாபர் விஷயத்தில் கூட ஒரு நாளும் யாரையும் பார்க்கவில்லை. எந்தவித உதவியும் கேட்கவில்லை. நானே எதிர்கொள்வேன் என நின்றேன்.  நாம் தமிழர் கட்சி ஜெயிக்கவே ஜெயிக்காது என கூறிய சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அண்ணன் (சீமான்) அறிக்கை வெளியிடுகிறார். திருச்சி சிவா மகனோடு மல்லுக்கட்ட முடியவில்லை என்னோடு மல்லுக்கட்டி என்ன செய்ய என அமீர் சாட்டை துரைமுருகனிடம் புலம்பும் ஆடியோவை திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளார் 

Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது

click me!