விருகம்பாக்கம் அருகே 30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவனை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்த உறவினர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் அருகில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அதே துணிக்கடையில் குடும்ப வறுமை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவனும் வேலை செய்து வந்துள்ளான். இதனிடையே சிறுவனும், அப்பெண்யும் கடையில் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மேலும் சிறுவன் அப்பெண்ணை அக்கா என்று அழைத்ததால் உடன் பணிபுரிபவர்களுக்கு பெரிதாக சந்தேகம் ஏற்படவில்லை.
இதனிடையே இருவரும் வெவ்வேறு காரணங்களை கூறி அவ்வபோது ஒரே நாளில் விடுப்பு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இருவரையும் கண்காணிக்கத் தொடங்கினர். அவர்களது சந்தேகம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள் சிறுவனை கண்டித்துள்ளனர்.
undefined
இது என்ன தமிழ்நாடா? இல்லை உத்திரபிரதேசமா? நிர்வாகியின் படுகொலையால் சீமான் உச்சக்கட்ட ஆவேசம்
ஆனாலும், சிறுவனும், அப்பெண்ணும் தங்களுக்கு இடையேயான உறவை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் சுதாரித்துக் கொண்ட இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி சிறுவனும், அப்பெண்ணும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது உறவினர்கள் சிறுவனை மீட்டனர். இதனை பார்த்த அப்பெண் அச்சத்தில் உடனடியாக மாயமானார்.
Breaking News : கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது
இது தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் அமைப்பு சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனை அப்பெண் அழைத்துச் சென்றதால் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.