மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Jul 14, 2024, 8:34 AM IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவாலயம் வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 


உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவாலயம் வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவர் மயங்கிய நிலையில் இருந்ததை அடுத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு  வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

click me!