வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 13, 2024, 6:51 AM IST

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை X மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு KEC CMRL பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து சீராக செல்ல வேண்டி பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.


மெட்ரோ ரயில் பணி காரணமாக மடிப்பாக்கம், மேடவாக்கத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் S-7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை X மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பு KEC CMRL பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து சீராக செல்ல வேண்டி பின்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குட்நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

* கைவேலியில் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் மாநகர பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் இடது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து மீண்டும் இடது புறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம்.

* மடிப்பாக்கம் இருந்து கீழ்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடது புறம் திரும்பி சபரி சாலை axis bank வழியாக வந்து வலது புறம் திரும்பி Lake view Road-ல் இருந்து மீண்டும் வலது புறம் திரும்பி இராஜேந்திரன் நகர் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை நோக்கி செல்லலாம். 

* கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. 

click me!