ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த படுகொலையின் பின்னணியில் தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்வது போல உள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் 10 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: Armstrong Murder News: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்? வெட்டிய விதத்தை பார்த்தா இவங்களா இருக்குமோ?
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த படுகொலையின் பின்னணியில் தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படை கும்பல் கொலை செய்வது போல உள்ளது என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு 10 நாட்களாக இவர்கள் நோட்டமிட்டதும், கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திருமலையுடன் சேர்ந்து புன்னை பாலு கூட்டாளிகள் பெரம்பூரில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் மது அருந்தியபடியே திட்டம் தீட்டியுள்ளனர். குறிப்பாக ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புப் பகுதிகளில் குறிவைத்து கழுத்து, தொடை, கணுக்கால் நரம்பு ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளனர். மேலும் கொலை நடக்கும் இடத்திற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வந்த கொலையாளிகள் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?
போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி 5 இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்து ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு (எ) வினோத்தின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.