Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jul 14, 2024, 7:20 AM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய  ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கிடம்  உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சிக்கிய திமுக நிர்வாகிகள்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், இவர்கள் 11 பேரையும் 5  நாட்கள் போலீஸ் காவலில்  எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகின்றன. 

இதையும் படிங்க:  Armstrong : 10 நாட்களாக நோட்டம்! ஒயின் ஷாப்பில் ரூட்! 45 நிமிடங்கள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து சென்ற ரவுடி திருவேங்கிடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்த போது மாதவரம் ஏரிக்கரை பகுதியில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரை தொடர்ந்து சென்னை வடக்கு சூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பித்தக்கது.

click me!