ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்.. 3 ஆண்டுகளில் 8 லட்சம் அபராதம் .. 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு

By Thanalakshmi VFirst Published May 29, 2022, 11:16 AM IST
Highlights

சென்னை ரயில்வே கோட்டத்தில்‌, பாதுகாப்பு விதியை மீறி, ரயில்‌ படிக்கட்டுகளில்‌ தொங்கியபடி பயணித்தது தொடர்பாக, மூன்று ஆண்டுகளில்‌ 2,219 பேர்‌ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரை ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” சென்னை ரயில்வே கோட்டத்தில்‌ ஓடும்‌ ரயில்களில்‌ படிக்கட்டில்‌ தொங்கியபடி பயணித்தது தொடர்பாக, 2020-ஆம்‌ ஆண்டில்‌ 965 பேர்‌ மீது வழக்குகள்‌ பதிந்து, ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 700 அபராதம்‌ விதிக்கப்பட்டது. 2021-இல்‌ 890 பேர்மீது வழக்குகள்‌ பதிந்து, ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 அபராதம்‌ விதிக்கப்பட்டது. 

2022-ஆம்‌ ஆண்டில்‌ ஏப்ரல்‌ வரை 364 பேர்‌ மீது வழக்குகள்‌ பதிந்து, ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 300 அபராதம்‌ விதிக்கப்பட்டது. மொத்தம்‌ 2020-ஆம்‌ ஆண்டு முதல்‌ 2022 ஆம்‌ ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில்‌ 2,219 பேர்‌ மீது வழக்குகள்‌ பதிந்து, மொத்தம்‌ ரூ.8 லட்சத்து 81 ஆயிரத்து 100 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்களில்‌ பயணத்தின்‌ போது, படிக்கட்டுகளில்‌ தொங்கியபடி, ஆபத்தான முறையில்‌ பயணித்தோர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, ஆர்‌.பி.எஃப்‌. சார்பில்‌ பல்வேறு குழுக்கள்‌ அமைத்து, ரோந்து பணியில்‌ ஈடுபட்டு வருவதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள்‌ தெரிவித்தனர்.
 

மேலும் படிக்க: திடீரென்று 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் .. அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்..

click me!