திடீரென்று 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் .. அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்..

By Thanalakshmi VFirst Published May 29, 2022, 10:42 AM IST
Highlights

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியதால் புனித நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் சில தினங்களாக பலத்த சூறாவளி காற்று வீசிவருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகாசி மாத சர்வ அமாவாசை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இன்று புனித நீராட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். 

இந்நிலையில் அக்னி தீர்த்த பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.இதனால் பொதுமக்கள் ,சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். கடல் உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் தெளிவாக வெளியே தெரிந்தது.
 
மேலும் படிக்க: தெருக்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கம்.. சிங்கார சென்னை 2.0 கீழ் மாநகராட்சி நடவடிக்கை..

click me!