சென்னையில் பேருந்து தனியார் மயம்..! முதலமைச்சருக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த 9 தொழிற்சங்கங்கள்

By Ajmal Khan  |  First Published Mar 7, 2023, 10:47 AM IST

தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக்குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


சென்னையில் பேருந்து மனியார் மயம்.?

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. . Gross Cost Contract முறையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துத் துறையில் செயல்பட்டு வந்த பேருந்துகளை 1972-ல் போக்குவரத்துக் கழகமாக்கப்பட்டது. தனியார் வசமிருந்த பேருந்துகளையும் 1973 ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கி, போக்குவரத்துக் கழகங்களுடன் இணைத்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சாரும். 

தனியார் மயமாக்க திட்டமிட்ட ஜெயலலிதா

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2001 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முயன்றபோது, தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக வேலைநிறுத்தம் செய்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் “மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தனியார் வசம் விடப்படும் பேருந்துகளை மீண்டும் தேசியமயமாக்குவோம்” என்று கூறியதால் அம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தங்கள் தலைமையில் ஆட்சி மலர்ந்து, பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருப்பதை கணக்கில் கொண்டு தொழிலாளர்கள் 2 ஆண்டுக்கான ஊதிய பலன்களை விட்டுக் கொடுத்து, ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டார்கள்.

ஒப்பந்த முறையில் பணி

(1) ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரையில் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் திரும்பப் பெறப்படவில்லை. ஆகவே தாங்கள் இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(2) ஒப்பந்த முறையில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்களை பணியில் அமர்த்தும் உத்தரவை திரும்பப் பெற்று வழக்கம்போல் நேரடியாக பணி அமர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தனியார் மயத்திற்கு எதிர்ப்பு

(3) தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக்குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் தொமுச, சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் கைழுத்திட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

சவால் விட்ட அண்ணாமலை.! விசாரணைக்கு அழைக்க போலீஸ் திட்டம்..? அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்

click me!