பழனியில் போதை தலைக்கேறி மின் கம்பியை பிடித்த நபர் உடல் கருகி உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Mar 7, 2023, 10:13 AM IST

பழனி அருகே ஆயக்குடியில் குடிபோதையில் மின் வயரை பிடித்ததில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடி பகுதியில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளி வடிவேல் (வயது 52). திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வடிவேல் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையில் இருந்த வடிவேல் சாலையில் தள்ளாடியபடி சென்றுள்ளார். 

ஆயக்குடி அரசு மருத்துவமனை எதிரில் நடந்து சென்ற வடிவேல் திடீரென சாலை ஓரத்தில் இருந்த ஆயக்குடி தபால் நிலைய வீட்டின் மீது ஏறியுள்ளார். மது போதையில் இருந்த வடிவேல் வீட்டின் மீது சென்ற மின்சார வயரை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் வடிவேல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

புதுவையில் சோகம்; தாய் கண்முன்னே அலையில் சிக்கி 3 மகன்கள் பலி

அக்கம் பக்கதினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வடிவேலின் உடலை மீட்டனர். பின்னர் பழனி அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி வடிவேல் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்த ஆயக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்த்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை, ஒருவர் உடல் மாயம்
 

click me!