திண்டுக்கல் மாவட்டம் சாரணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகள், 114 வீரர்கள் போட்டியில் களம் காண்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி கருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 450 காளைகளும், 114 மாடுபிடி வீரர்களும் இணையதளம் மூலம் பதிவு செய்திருந்தனர்.
கால்நடைஉதவி இயக்குநர் திருவள்ளுவன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதி அளித்தனர்.
undefined
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். முதலில் பாரம்பரிய முறைப்படி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சினிமா பாணியில் காரை குத்தி கிழித்த கொம்பன் யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்
காளைகளைப் போட்டி போட்டுக் கொண்டு மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு போக்கு காட்டி காளைகள் அவர்களை முட்டித் தள்ளின. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 6 டி.எஸ்.பிகள் தலைமையில் 260க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்; மயிலாடுதுறையில் 5 மீனவர்கள் படுகாயம்