அனைத்து வகையான பயணிகள் வாகனங்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து பெர்மிட் வழங்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்
சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து பெர்மிட் வழங்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக மாநில போக்குவரத்து ஆணையம் அல்லது அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டு வெளியாகியுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையிலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டும், சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக அரசின் அனுமதியின்றி பதிவு செய்து பெர்மிட் வழங்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல் முழு விவரம்: கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!