அமேசான் வெப் சர்வீஸ் மூலம் புதிய மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த மென்பொருட்களின் ரகசியத்தை எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிலர் திருடி உள்ளனர்.
சென்னையில் வேலை பார்த்த நிறுவனத்தின் மென்பொருள் ரகசியங்களை தகவல்களை திருடி சொந்தமாக மென்பொருள் நிறுவனம் ஆரம்பிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், எங்கள் நிறுவனம் அமேசான் வெப் சர்வீஸ் மூலம் புதிய மென்பொருட்களை வங்கி நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த மென்பொருட்களின் ரகசியத்தை எங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிலர் திருடி உள்ளனர். இந்த விஷயம் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மூலம் தெரியவந்தது. நாங்கள் தயாரிக்கும் மென்பொருட்கள் ரகசியத்தை திருடிய அவர்கள், தனியாக கம்பெனி தொடங்க திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
undefined
இதையும் படிங்க;- நைட்டானாவே ஃபுல் மப்பிள் டார்ச்சர்.. அதுக்கு மறுத்த மனைவி.. அடம் பிடித்த கணவர்! மர்ம உறுப்பில் அடித்து கொலை.!
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த எடிசன் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க;- ஹவுஸ் ஓனர் மனைவியை கரெக்ட் செய்த யோகா மாஸ்டர்! உல்லாசத்துக்காக கணவனை கொன்ற 2வது மனைவி!சிக்கியது எப்படி?
அப்போது தன்னுடன் பணியாற்றிய நீலாங்கரையை சேர்ந்த ராம்குமார் (29), ஆதம்பாக்கம் சுரேந்திர நகரை சேர்ந்த காவ்யா (29), பெங்களூருரை சேர்ந்த ரவிதா(40), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த கருப்பையா (26) ஆகியோர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட டேட்டாக்களை திருடி, அதை ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 ஊழியர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.