
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து, திருச்சியில் ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகலைத் தீயிட்டுக் கொளுத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜீவா அளித்த பேட்டி மற்றும் போராட்டக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.