
விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வ.உ.சி.யின் தியாகங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலங்களில் வ.உ.சி.க்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், சாதாரண மக்களைப் பற்றி அரசு கவலைப்படவில்லை என்றும் சாடினார். மேலும், மேகதாது விவகாரத்தில் டெல்லி சென்றும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாக விமர்சித்த அவர், தமிழ்நாடு ஆளில்லாத ரயில்வே கேட் போல பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பு குறித்த கேள்விக்கு, அவர் மீது திமுக தலைவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது வசதி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது என்றும் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்தார்.