போலீஸ் வாகனத்தில் இருந்தவரை இழுத்துப்போட்டு அடித்த திருநங்கைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Published : Aug 29, 2022, 08:47 PM IST
போலீஸ் வாகனத்தில் இருந்தவரை இழுத்துப்போட்டு அடித்த திருநங்கைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்தவரை திருநங்கைகள் இழுத்துப் போட்டு அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்தவரை திருநங்கைகள் இழுத்துப் போட்டு அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கம் போல் அனைவரும் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த திருநங்கைகளிடம் அங்கு நின்றுக்கொண்டிருந்த ஒருவர் வாக்குவாததத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

இதனால் ஆத்திரமடைந்த   திருநங்கைகள் அந்த நபருடன் தகராறு செய்ததோடு தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் இருவரிடம் சமரசம் பேசி அந்த நபரை காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். காவல்துறையின் சமரசத்திற்கு இணங்காத திருநங்கைகள், காவல்துறை வாகனத்தில் இருந்த நபரை வெளியே இழுத்துப்போட்டு தாக்குதல் நடத்தினர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு… இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை, எதற்காக வாக்குவாதல் ஏற்பட்டது, எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை. இந்தக் சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே திருநங்கைகளால் தாக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
புதுச்சேரியை பார்த்து கத்துக்கோங்க.. முதல்வர் ஸ்டாலினை சீண்டிப்பார்த்த விஜய்