”டேய் பொடியா ஹெல்மெட் போடு” கொங்கு தமிழில் கோவை போலீசின் வைரல் வீடியோ..

Published : Oct 22, 2022, 05:45 PM IST
”டேய் பொடியா ஹெல்மெட் போடு” கொங்கு தமிழில் கோவை போலீசின் வைரல் வீடியோ..

சுருக்கம்

”டேய் பொடியா ஹெல்மெட் போடு” என்று கோவை போக்குவரத்து காவலர் ஒருவரின் விழிப்புணர்வு பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தமிழகத்தில் ஹெல்மெட் போடாமால் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஹெல்மெட் அணவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. மேலும் ஹெல்மெட் போடாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசார், நகைச்சுவை உணர்வுடன் சாலை விதிகளை குறித்து பேசும் விழிப்புணர்வு வீடியோ அவ்வப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகும். 

மேலும் படிக்க:ஒரே நேரத்தில் அக்கா தங்கைகள் 3 பேரும் போலீஸ்... போன் போட்டு வாழ்த்திய திமுக து.பொ.செ கனிமொழி...

முன்னதாக மதுரையில் சிக்னலில் போக்குவரத்து காவலர் திருக்குறளை எடுத்து சொல்லி, வாழ்க்கை குறித்து நேர்மறையாக பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. அதே போன்று தற்போது கோவையில் போக்குவரத்து காவலர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் சிக்னல் ஒன்றில் ஹெல்மெட் போடாமல் போகும் ஒரு நபரை பார்த்து ”பொடியாக ஹெல்மெட் போடு” என்று பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வண்டியில் மூன்று பேர வேற என்று கோவைக்கு உரிய கொங்கு மொழியில் பேசக்கூடிய அந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

மேலும் படிக்க:சிவகங்கையில் 144 தடை உத்தரவு.. நாளை முதல் 31 ஆம் தேதி வரை அமல்.. ஏன் தெரியுமா..?

PREV
click me!

Recommended Stories

மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!