சிவகங்கையில் 144 தடை உத்தரவு.. நாளை முதல் 31 ஆம் தேதி வரை அமல்.. ஏன் தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Oct 22, 2022, 5:05 PM IST
Highlights

மருதுபாண்டியர் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூகை ஆகியவற்றை சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து மாவட்ட எஸ்.பி செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். 
 

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடிய பெரிய மருது, சின்ன மருது எனப்படும் மருது சகோதரர்கள், போராட்டக் குழுக்களை ஒன்றிணைத்துத் திரட்ட முயற்சித்ததால், 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். 

மேலும் படிக்க:சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் அடுத்த காளையார் கோவிலில் இவர்களது நினைவாலயம் அமைந்துள்ளது. வரும் அக்.24 ஆம் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தையொட்டி காளையார்கோயிலில் குருபூஜை நடைபெறும். இதுபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்.31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

எனவே இவ்விரு தினத்தையொட்டி நாளை முதல் அக்.31 வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க:அதிர்ச்சி தகவல்.. 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம்..? பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு..

click me!