பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருவதையொட்டி மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை வரும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரவுள்ளார். பிரதமர் மோடி நாளை மதியம் 2:45 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணி அளவில் செல்லும் மோடி, சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து விவேகானந்தில் இல்லத்தில் நடைபெறும் ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே பிரதமர் மோடியின் சென்னை பயணத்தையடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், நாளை சென்னை சென்ட்ரல் சென்னை விவேகானந்தர் இல்லம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
தமிழகம் வரும் மோடி..! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- பிரதமரின் பயண திட்டம் என்ன தெரியுமா.?
போக்குவரத்தை மாற்றம் செய்த போலீஸ்
சென்னை ஐ என் எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தரின் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மெதுவாக செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து வாகனங்கள் ஆர்.கே சாலைக்கு விடப்படும் அங்கிருந்து நடேசன் சாலை வழியாக ஐஸ் ஹவுஸ் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா சாலை வழியாக உழைப்பாளர் சிலை அல்லது அண்ணா சாலை வலது புறம் திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சென்னையில் இருந்து வாலாஜா சாலையில் அண்ணா சாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அலர்ட்
தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவு இடத்தில் இருந்து வாலாஜா பாயிண்ட் வழியாக அண்ணா சாலையை நோக்கி கொடி ஊழியர்கள் சாலை திருப்பிவிடப்படலாம் இந்த போக்குவரத்து மாற்றமானது மாலை 4 மணி முதல் 6:00 மணி வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் ஆர்ச் முதல் முத்துசாமி முத்துசாமி பாலம் சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்க படாது எனவும், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணா நகர் புதிய ஆவடி புதிய ஆவடி சாலை வழியாக திருப்பி விடப்படும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
எம்ஜிஆர் குல்லா,கண்ணாடியோடு எடப்பாடி பழனிசாமி..! ஓ.பன்னீர் செல்வத்தின் ரியாக்ஷன் என்ன தெரியுமா..?