தந்தையின் இறுதிச்சடங்கை விட பொதுத்தேர்வு முக்கியம் - மாணவியின் செயலால் நெகிழ்ந்த உறவினர்கள்

By Velmurugan sFirst Published Apr 7, 2023, 11:24 AM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தந்தை உயிரிழந்த நிலையிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுத வந்தனர். பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 40). கட்டிட  கூலி வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை ஜோதிலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜோதிலிங்கத்தின் மகள் விஷாலினி ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு வரும் போதே கண்களில் கண்ணீரோடு சோகமாக வந்தாள். சக மாணவிகள் விஷாலினியிடம் விவரம் கேட்கவே தனது தந்தை இறந்த தகவலை கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

Latest Videos

பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

நேற்று தந்தை இறந்தாலும் இறுதி சடங்கில் பங்கேற்காமல் பொதுத் தேர்வு எழுத வந்த விஷாலினி கண்களில் கண்ணீரோடு தேர்வு மையத்திற்கு வந்தது சக மாணவிகளிடையே நெகிழ்ச்சியை எற்படுத்தியது. விஷாலினிக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

click me!