நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை... சென்னை மாநகராட்சி அதிரடி!!

By Narendran S  |  First Published Apr 5, 2023, 6:51 PM IST

சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. 


சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை அடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீச்சல் குளங்களை பராமரிப்பது மற்றும் சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி 5 பேர் பலி.. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த *** பகீர் சம்பவம் - நங்கநல்லூர் விபத்து பின்னணி

Tap to resize

Latest Videos

அதில், சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது. 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

இதையும் படிங்க: அச்சச்சோ.! திடீரென சரிந்த மேடை.. ஜஸ்ட் மிஸ்.!! எகிறி குதித்த அன்புமணி ராமதாஸ் - வைரல் வீடியோ

நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை. குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!