சென்னையில் 3ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி..! வாகன ஓட்டிகளே உஷார்..! மீண்டும் ரூட்டை மூடிய போக்குவரத்து துறை

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 9:13 AM IST
Highlights

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயிலின் 3 ஆம் கட்ட பணிக்காக அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று ரூட்டை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

 நாளை முதல் போக்குவரத்து மாற்றம் 

சென்னை பெருநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்களுக்கான மூன்றாம் கட்ட வழித்தட பணிகளில் அயனாவரம் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது . சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மெட்ரோ இரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக நாளை முதல் (25.01.2023) புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் படி,

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. எங்க கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

1. மெட்ரோ இரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக  ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

2. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டிபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

3. கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள். கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

(அல்லது)

4. கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

(அல்லது) 

ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

மாற்று வழி அறிவித்த போக்குவரத்து துறை

5. கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை & மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுமீஸ் சாலை, கான்ஸ்டிபள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்..

6. கான்ஸ்டிபள் சாலையில் மில்கிங்டன் சாலை சந்திப்பிலிருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டர் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

புதிய வழிகளில் வாகனங்கள் இயக்கம்

7. கனரக வாகனங்கள் கான்ஸ்டிபள் சாலை & பில்கிடேன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டிபன் சாலை, போர்சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

8. கொன்னூர் நெடுஞ்சாலையிலிருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லாம்

எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு காவல்துறை ஒத்துழைப்பு நல்கி உதவுமாறு மாற்றங்களை பின்பற்றி போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டறியப்படாதது ஒரு அவமானமான செயல்.! அரசுக்கு ஆம் ஆத்மி எச்சரிக்கை

click me!