முதுமலையில் நடு ரோட்டில் சண்டைபோட்ட காட்டு யானைகள்.! அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

Published : Feb 04, 2025, 02:20 PM IST
முதுமலையில் நடு ரோட்டில் சண்டைபோட்ட காட்டு யானைகள்.! அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

சுருக்கம்

முதுமலை சாலையில் இரண்டு ஆண் யானைகள் திடீரென மோதிக்கொண்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். யானைகளின் மோதலை சுற்றுலா பயணிகள் ஆனந்தத்துடனும் அதிர்ச்சியுடனும் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்தனர். நீண்ட நேர மோதலுக்குப் பின் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.

இயற்கையை தேடி செல்லும் சுற்றுலா பயணிகள்

இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு எப்போதாவது ஓய்வு கிடைத்தால் இயற்கையான இடங்களை தேடி செல்வார்கள். அந்த வகையில்  இயற்கையை ரசிப்பதற்காக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என சுற்றுலா தளங்களை நோக்கி பயணம் செய்வார்கள். அந்த வகையில் முதுமலை பகுதி இயற்கையின் சொர்க்கமாகவே உள்ளது. புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குள் அதிகமாக உள்ள இடமாக உள்ளது. எனவே வன விலங்குகளை பார்ப்பதற்காகவும் குளுமையான சூழலை ரசிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். 

சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடையாக அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்

முதுமலையில் வன விலங்குகள்

அந்த வகையில் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூரூ, பெங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யலாம். அதே போல  தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக உதகைக்கு செங்குத்தான மலைப்பாதையில் பயணம் செல்லாம்.  எனவே செல்லும் வழியில் யானைகள் உள்ளிட்ட அரிய விலங்குளை பார்வையிட்டு செல்ல சுற்றுலா பயணிகள் விரும்புவார்கள். அப்படி சுற்றுலா சென்ற பயணிகளுக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்  கலந்த சம்பவம் நடைபெற்றது. 

வால்பாறையை அச்சுறுத்தும் சுள்ளி கொம்பன்.! ஒற்றை காட்டு யானையால் பீதியில் மக்கள்

யானைகள் மோதல்

நீலகிரி மாவட்டம் முதுமலை கூடலூர் ,மசினகுடி சாலையில் யானைகளை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வருகை புரிகின்றனர். அந்த வகையில் முதுமலையில் சாலையில் கூட்டமாக வந்த  இரண்டு ஆண் யானைகள் திடீரென தங்களுக்குள் மோதிக்கொண்டது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஒரு பக்கம் ஓட தொடங்கினர். அதே நேரம் ஆனந்தம் கலந்த அதிர்சியுடன் தங்களது மொபைல் போனில் இந்த காட்சியை பதிவு செய்தனர். நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த யானை  பின்னர் வனபகுதிக்குள் சென்று விட்டன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!