தமிழகத்தில் இந்த 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம்..!

By vinoth kumarFirst Published Sep 1, 2022, 9:34 AM IST
Highlights

தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடம்தோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. 

தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடம்தோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

அதன்படி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலபட்டி, கரூர், விருதுநகர், புதூர் பாண்டியபுரம், மதுரை, நாமக்கல் ராசம்பாளையம் உள்ளிட்ட 28 ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலானது.

கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

click me!