இன்று ஸ்ரீமதி பிறந்த நாள்.. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெற்றோர் செய்த மனதை உருக்கும் காரியம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2022, 4:07 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மரக்கன்று நட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது தாய் தந்தை மரக்கன்றுகளை நட்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மரக்கன்று நட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது தாய் தந்தை மரக்கன்றுகளை நட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர்  சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாணவி  உயிரிழந்து 3 நாட்களாகியும் போலீசார் மௌனம் சாதித்து வந்தனர், இதனால்  ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் திரண்டு வந்து பள்ளியை தாக்கி அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதையும் படியுங்கள்: வேலூரில் தண்ணீர் பம்பை மறைத்து கால்வாய் கட்டியவர் அதிமுகவை சேர்ந்தவர்...! துரைமுருகன் கூறிய பரபரப்பு தகவல்

இதை போலீசார் கலைக்கிய முயன்றதில் அது கலவரமாக வெடித்தது, 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர், இதைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 300க்கும் அதிகமானவர்கள் போலீசார்  கைது செய்துள்ளனர். அது திட்டமிட்ட வன்முறை என்றும் கனியமூரைச் சுற்றியுள்ள தலித் குடியிருப்புகளில் நுழைந்து போலீசார் இளைஞர்கள் மாணவர்களை  கைது செய்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  யாரையும் ஜாதி பார்த்து கைது பண்ணல.. கலவரம் பண்ணவங்களதான் பண்றாங்க, திருமாவளவனை எகிறி அடித்த எச்.ராஜா.

சாதிய நோக்கத்துடன் இந்த  கைது நடவடிக்கைகள் இருந்து வருவதாகவும் இதில் கலவரத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அப்பாவிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது ஒரு புறம் உள்ள நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது, இரண்டு முறை மாணவிக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, முதல் உடற்கூறு ஆய்வில் மாணவியின் உடலில் சில சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது உடற்கூறு ஆய்வுக்கானா முடிவுக்கு அவரது பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பலரும் மாணவியின் விவகாரம் தற்கொலை அல்ல கொலை என்றே கூறிவருகின்றனர்.  முன்னதாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்துக்கு மத்தியில் ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று அவரது பெற்றோர்கள் குடும்பத்தினர் உறவினர் ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர் 

பின்னர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.. ஆல மரம்,  வேப்ப மரம்,  இலுப்பை மரம், பலா மரம்,  புன்னை மரம், நாவல் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. ஸ்ரீமதி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார் என அடக்கம் செய்யப்பட்ட அன்று அவரது தந்தை கூறியிருந்தார், அதாவது ஸ்ரீமதி போல இனி எந்த பெண்ணுக்கும் இந்த நிலை நேரக்கூடாது என்ற நோக்கத்தில் அவள் அப்படி கூறியிருந்தார். இந்நிலையில் ஸ்ரீமதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!